சரிந்துவிழும் நிலையில் கற்பாறைகள் – அச்சத்தில் மக்கள்!

பொகவந்தலாவை, கெம்பியின் – ராணிக்காடு பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் நேற்றிரவு முதல் இன்றுகாலைவரை குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைபட்டது.

வீதியில் சரிந்து விழுந்த கற்பாறைகளை பொது மக்கள் இணைந்து அகற்றினர் .எனினும், குறித்த பகுதியில் பாரிய கற்பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவை, நோர்த்கோவ், லொயினோன் ராணிக்காடு ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த 1000 இற்கு மேற்பட்ட மக்கள் இவ்வீதியையே பயன்படுத்திவருகின்றனர்.

கடும் மழை காரணமாக குறித்த வீதியிலுள்ள பாரிய கற்பாறை எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியினூடாக பயணிக்கும் பொது மக்கள் மாணவர்கள் வாகன சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

சரிந்து விழும் நிலையில் உள்ள கற்பாறையை அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

Related Articles

Latest Articles