“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்குச் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை. எங்களுடைய நாட்டுக்குள்ளேயே எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” –
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது நூலகத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும். கடந்த கால ஆட்சி யாளர்களால் கொண்டுவரப்பட்ட மாகாண எல்லை நிர்ணயத் திருத்தச் சட்டம் காரணமாகவே தேர்தலை நடத்து வதில் தாமதம் ஏற்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் நாடாளு மன்றம் ஊடாக அதில் திருத்தங்களை மேற்கொண்டு, மக்களுக்கும் தெளிவு படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.’’ எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமான தீவாகும். அதற்கு எவரும் உரிமை கோர முடியாது. எங்களுக்கு இந்தியாவுடன் மிகவும் நெருங்கிய உறவு உள்ளது. கச்சதீவைத் தங்களுக்கு மீண்டும் வழங்குமாறு இந்திய அரசு எந்தவித மான கோரிக்கைகளையும் முன்வைக்க வில்லை. எங்களுக்குத் தேர்தல் காலங்களில் கச்சதீவை மீட்போம் என்ற பிரசாரங்களைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
தமிழகத் தில் தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக கச்சதீவு தொடர்பில் பேசப் படுகின்றது. சட்ட ரீதியாக கச்சதீவை இந் தியா மீளப்பெறுவதற்கான எந்த ஏற்பாடு களும் இல்லை.” எனவும் ஜே.வி.பியின் செயலாளர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு என்பது நீண்ட கால மாக இருக்கும் ஒரு பிரச்சினையாகும். இந்த நாட்டில் நடந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களைத் தேடி நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கி யுள்ளோம். ஊழல், மோசடிகளில் தற்போது இருப்பது மக்களு டைய அரசு. எனவே, மக்களுக்கு நியா யத்தை வழங்குவது எமது பொறுப்பாகும். நீதியை வழங்குவதற்குச் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை.
எங்களு டைய நாட்டுக்குள்ளேயே எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். “ என ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.