சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று விராட் கோஹ்லி சாதனை!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 87 பந்துகளில், 89 ஓட்டங்களை (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

78ஆவது ஓட்டத்தை எடுத்தபோது அவர் சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை தொட்டார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்றிலும் சேர்த்து 22 ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்த ரன்னை அவர் அதிவேகத்தில் எடுத்து சாதனை படைத்தார்.

விராட் கோஹ்லி ஒருநாள் போட்டியில் 11,977 ரன்களும், டெஸ்டில் 7,240 ரன்களும், 20 ஓவரில் 2,794 ரன்களும் எடுத்துள்ளார். 462 இன்னிங்சில் அவர் 22 ஆயிரத்து 11 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 56.15 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். 70 சதமும், 105 அரை சதமுமம் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 12 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 23 ரன்களே தேவை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த 8-வது வீரர் விராட் கோஹ்லி ஆவார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர், டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி , 20 ஓவர்) 22,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. தெண்டுல்கர் (இந்தியா)- 34,357 ரன்கள் (782 இன்னிங்ஸ்).

2. சங்ககரா (இலங்கை) – 28,016 ரன்கள் (666).

3. பாண்டிங் (ஆஸ்திரேலியா) -27,483 ரன்கள் (668).

4. மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) -25,957 ரன்கள் (725).

5. ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) -25,534 ரன்கள் (617).

6. டிராவிட் (இந்தியா) -24,208 ரன்கள் (605).

7. லாரா (வெஸ்ட இண்டீஸ்)- 22,358 ரன்கள் (521).

8. விராட் கோலி (இந்தியா)- 22,011 ரன்கள் (462).

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles