சர்வமத அனுஷ்டானங்களைச் செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான ஹட்டன் நேஷனல் வங்கி வருடத்தின் நடுப்பகுதியில் நடத்தும் சர்வ மத அனுஷ்டான நிகழ்வு அண்மையில் HNB தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடும் அதன் மக்களும் விடுபட பிரார்த்தனை செய்யும் வகையில் நடைபெற்ற இந்த சர்வமத அனுஷ்டான நிகழ்விற்கு HNBன் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சவாலான காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் சேவையை தொடர்ந்ததற்காக ஹட்னா குடும்பத்திற்கு ஒரு சிறப்பு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

பௌத்த மத சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த அனைத்து மத சடங்குகளும் பிரித் ஓதுதலுடன் ஆரம்பமாகியதுடன், கிறிஸ்தவ பிரார்த்தனை மற்றும் இஸ்லாமிய மற்றும் இந்து சமய சடங்குகளும் நடைபெற்றன. வங்கியின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் அதன் தலைமைத்துவம், நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்களின் வெற்றிக்காக ஆசிகளும் இந்த சர்வமத அனுஷ்டானங்களின் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles