சாமிமலை சாலையில் இரவிலும் ஒளிராத தெரு விளக்கு

மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை மஸ்கெலிய பிரதான சாலையில் மல்லியப்யு சந்தியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு நீண்ட காலமாக ஒளிராத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தெரு விளக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் மஸ்கெலிய பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருட காலமாக செயழிலந்த நிலையில் காணப்படுவதனால்! இப்பிரதேச மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பல வியாபார நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் காணப்படுவதுடன் பல்வேறு இடங்களில் இருந்து தமது பிரயாணங்களை மேற்க்கொள்ள கூடுதலான பயணிகள் இரவு நேரங்களில் வந்து போவது வழக்கமாகும்.

மேலும் இந்த பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் மூன்று தடவைகள் பல திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

எனவே மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு மின் விளக்கை மீண்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(செல்லையா ஞானராஜ்)

Related Articles

Latest Articles