மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால், லயன் குடியிருப்பு கூரைகள் அள்ளுண்டுசென்றன.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் உறவுகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










