‘சாரா’ உயிரிழப்பு – DNA பரிசோதனையில் உறுதி

21/4 தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 15 பேரின் மாதிரிகளில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியான அச்சி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா ஜாஸ்மின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பான வீடொன்றில் தங்கியிருந்த வேளையில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் மரணமடைந்தவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டன.

உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக, குற்றவியல் விசாரணைகளில் நிபுணர்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அங்கு இறந்தவர்களில் புலஸ்தினி மகேந்திரனும் இருந்துள்ளார்.

புலஸ்தினி மகேந்திரனின் தயாரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட டீ.என்.ஏ மாதிரி, குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரி, தாய்க்கும் மகளுக்கும் இடையில் உயிரியல் ரீதியான தொடர்பு ஆகியவற்றை அடிப்படையா வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவை உறுதிப்படுத்தப்பட்டன.

புலஸ்தினி மகேந்திரன் அவருடைய தாயாரான ராஜரத்னம் கவிதா ஆகியோருக்கு இடையிலான தொடர்பு 99.9999 சதவீதம் உறுதியானது என்பது அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பான வீடொன்றில் தங்கியிருந்த போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் சாரா ஜஸ்மின் என்றழைப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவர் மரணமடைந்துவிட்டார் என்பது உறுதியானது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Related Articles

Latest Articles