சிறிகொத்தவை கைப்பற்றுவாரா சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எந்த எண்ணமும் இல்லை. சிறிகொத்தவை கைப்பற்றும் நோக்கமும் கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பினோம். அதற்கு மக்கள் பேராதரவை வழங்கினர். எனவே, ஐதேகவுடன் கூட்டு வைக்கும் திட்டம் இல்லை. அது ஒருபோதும் நடக்காது. ரணில் விக்கிரமசிங்க என்பவர் தற்போது மொட்டு கட்சியின் தலைவர்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வங்குரோத்தடைந்துவிட்டது. எனவே, சிறிகொத்தவை கைப்பற்ற வேண்டிய தேவைப்பாடும் எமக்கு கிடையாது. சிறந்த மக்கள் இயக்கமொன்று எம் வசம் உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles