சிறுத்தை சடலமாக மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தோட்டத்திலுள்ள தேயிலை புதருக்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் இருந்துள்ளது.

சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல கால்நடை வைத்திய பிரிவுக்கு கொண்டுச்செல்ல நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles