நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்வதற்கு தோட்டத் தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.
அத்துடன், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் இந்த சிறுத்தை புலிகள், வேட்டையாடிச் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, இது தொடர்பில் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்