ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே, சீனாவின் சின்ஜியாங் வட்டாரம் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உய்குர் இனத்தவருக்கும் மற்ற முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் எதிராகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித இனத்துக்கு எதிரான சாதியமான குற்றங்கள் புரியப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
ஆதாரமின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுவிக்கச் சீனா தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்படுவதை விரும்பவில்லை என்று ஏற்கனவே சீனா பேஷ்லேயிடம் கூறியிருந்தது.
சின்ஜியாங்கில் அத்துமீறல்கள் நடந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைச் சீனா மறுக்கிறது.
மனிதர்களை வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்துதல், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களைத் தடுத்துவைத்தல் முதலியவை அந்தக் குற்றச்சாட்டுகளில் சிலவாகும்.
சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அமெரிக்கா சாடியது. ஆனால் தனது முன்னேற்றத்தைத் தடுக்கவே மேற்கத்திய நாடுகள் அத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சீனா கூறுகிறது.