சீரற்ற காலநிலை தொடர்கிறது – 5,373 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.

இதனால் ஆயிரத்து 344 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து  373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநியால், 352 வீடுகள் பகுதியளவிலும் இரு வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் 79 குடும்பங்களைச் சேர்ந்த, 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles