மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தலவாக்கலை , வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகாமையில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக குறித்த புகையிரதம் இன்று காலை 6:45 மணி அளவில் தடம் புரண்டுள்ளது.
தற்போது சீரமைப்பு பணி இடம்பெற்றுகின்றது.
கௌசல்யா