சீரற்ற காலநிலையால் 11,542 பேர் பாதிப்பு – மூவர் பலி – 205 வீடுகள் சேதம்!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் இதுவரை 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மூவர் உயிரிழந்துள்ளடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 205 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

42 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles