சு.க., ஜே.வி.பியும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார எம்.பி.,

“நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் கடுமையானவையாக இருக்கும் என்ற அரசின் எச்சரிப்பைக் கேட்க நாங்கள் விரும்பவில்லை.

அரசமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அரசு சரியான உத்தரவாதத்தை வழங்கவில்லை” – என்றார்.

ஜே.வி.பி. மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பனவும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானித்துள்ளன.

Related Articles

Latest Articles