– கே.சுந்தரலிங்கம்
44 சுகாதாதுறைச்சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக வைத்தியசாலைகளின் பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறித்த தொழிற்சங்கங்கள் இன்று (05) திகதி காலை ஏழு மணிமுதல் பகல் 12 வரை தமது சேவைகளிலிருந்து விலகியதன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வைத்தியசாலையில் சேவை புரியும் வைத்தியசாலை உதவியாளர்கள் மற்றும் ஒரு சில தாதியர்கள்,வைத்தியர்கள் ஆகியோர் விலகியுள்ளதனால் நோயாளர்கள் கொண்டு செல்வது, மற்றும் வாட்டுக்கள் சுத்திகரப்பு பணிகள் ஒழுங்கு படுத்தல் உள்ளிட்ட பல துறைகள் உள்ளிட்ட வைத்தியசாலையின் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வைத்தியசாலையில் நீண்ட கிவ் வரிசை காணப்பட்டன.
தொழிற்சங்க போராட்டம் காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காகவும் கிளினிக்காகவும் வருகை தந்தவர்களும் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த பெரும் எண்ணிக்கையிலான பொது மக்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
எனினும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர நோயாளர் பிரிவு உட்பட அத்தியவசிய சேவைகள் வழமை போலவே இயங்கின.
இந்த தொழிற்சங்க போராட்டம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் சகல அரச சேவையாளர்களையும் சேவைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,