புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இக்கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் சந்திரிக்கா அம்மையாளர் செயற்படுகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எமது அணி ஊடாக சுதந்திரக்கட்சி மீட்கப்படும் என்ற தகவலை வெல்கம வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ச கூட்டணியிலிருந்து வெளியேறிய குமார வெல்கம கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாசவை ஆதரித்ததுடன், பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரிக்கா அம்மையாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே புதிய அரசியல் இயக்கம் பற்றி பேசப்பட்டுள்ளது எனவும், பல தரப்புகள் இணையக்கூடும் எனவும் குமார வெல்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, புதியதொரு அரசியல் அணியை உருவாக்கினால்கூட வெல்கம தம்முடனேயே பயணிப்பாரென சஜித் அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
