சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.

உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் மக்கள் மனதில் நிலவி வருகிறது.

அரசுகள் ஒரு பக்கம் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், மக்கள் தாங்களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அவ்வகையில், சுவிஸ் மக்கள் விறகுக்கடைகளை நோக்கிப் படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே, விறகின் விலையும் அதிகரிக்கத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே விறகு விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வியாபாரிகள் சிலர் இதுவரை நாங்கள் இந்த அளவுக்கு விறகு விற்றதில்லை எனக் கூறியுள்ளனர்.

Related Articles

Latest Articles