நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் ஒக்டோபர் 7ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான சம்பவத்தால் குறித்த தோட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தோட்ட மக்கள் எவரும் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.

மேற்படி தீ விபத்து சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் உடல் கருகி பலியாகினர்.

இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
க.கிஷாந்தன்










