எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழுக் கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற
அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற விடுமுறைக் காலம் நீடிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, 5 ஆம் திகதியே நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள வளாகங்களை மீளப் பெறுவதற்கான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.










