உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், குட்டி தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணைக்குழு இறங்கவுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு எட்டு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என தேர்தல் ஆணைக்குழு முன்னர் மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில் புதிய மதீப்பீடு அடங்கி கணக்கறிக்கையை தேர்தல் ஆணைக்குழு, விரைவில் திறைசேரிக்கு அனுப்பிவைக்கவுள்ளது.
தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலர் கட்சி மாறியுள்ளனர், மேலும் சிலர் வெளிநாடு சென்றுள்ளனர், சிலர் உயிரிழந்துவிட்டனர். எனவே, புதிதாக வேட்பு மனுக்களை கோருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம்மூலம் இதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியும்.










