ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை பிரபல தொழில் அதிபரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஆரம்பித்துள்ளார்.
” வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ள வேண்டும்.” – என்று ஞாயிறு நாளிதழ் ஒன்றில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தம்மிக்க பெரேரா களமிறக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
நான்கு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது எனவும், அவர்களில் ஒருவர் தம்மிக்க பெரேரா எனவும் மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.