ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சிறப்பான முறையில் முகாமை செய்தார். அதனால்தான் நாடு மேம்பட்டுள்ளது.
அவருக்கு மேலும் ஒரு தடவை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையும்கூட. அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது.” – என்றார்.










