ஜனாதிபதி தேர்தல்: விமலின் ஆதரவு யாருக்கு?

“ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான தேவைப்பாடு அரசுக்கு உள்ளது. ஆனால் அந்த முயற்சி கைகூடாது. ஆளுங்கட்சியினர் விரும்பாவிட்டாலும் தேர்தலை நடத்தியாக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம். முற்போக்கு சக்திகளை இணைத்துக்கொண்ட கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொள்வோம். நாம் எமது வேட்பாளருடன்தான் தேர்தலுக்கு வருவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles