தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் அது அபிவிருத்தி பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே மௌனம் காத்துவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அதேவேளை, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் வகையிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்றிருந்தவர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தங்களிடமாவது அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கூறுமாறு பிரசன்ன ரணதுங்கவிடம் கூறியுள்ளனர். இதன்போது பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கூறிய மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.