ஜனாதிபதி ரணில்மீது தமிழ் மக்களுக்கு முழு நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல வருடங்கள் நிலவிய போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்தார். போர் நிலவிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டவே மேற்படி திட்டங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள மக்களின் ஆதரவு தமக்கு கிடைக்காதபோதிலும் நீதியை நிலைநாட்ட அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்க, கிழக்கு மக்களுக்கு தற்போதைய ஜனாதிபதிமீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பாதீட்டில் வடக்கு, கிழக்கு தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ” – என்றார்.

Related Articles

Latest Articles