ஜனாதிபதியுடன் 28 ஆம் திகதி இதொகா ஒப்பந்தம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலன்புரி திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை காங்கிரஸ் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற தேசிய சபை கூட்டத்தின் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles