ஜி – 20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் இணைந்துள்ளது.
டில்லியில் உள்ள பிரகதி அரங்கில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஜி20 மாநாட்டின் தலைவராக உங்கள் அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. ஜி 20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
