இந்தியாவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
2023 இல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார். செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். குறித்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமரும் பங்கேற்கின்றார்.










