ஜுன் 02 முதல் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்….

நாட்டில் அமுலில் உள்ள தொடர் பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வாழ்வாதார கொடுப்பனவுகளை ஏற்கனவே பெறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுன் 02 ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles