ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். ஆனால் எதிர்கட்சித் தலைவர் சஜித் அதற்காக முன்வரவில்லை. அப்போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம். தனது திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாக சொன்னார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரியாக செய்து முடித்தார்.
கடந்த இரு வருடங்களில் மக்கள் கஷ்டங்களைப் போக்க அவர் செய்த அர்பணிப்புக்களை கண்டதாலேயே மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வந்தோம். அதனால் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் நாம் இணைந்து கொண்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதியுடன் இருக்கிறோம்.
வாய்ச் சொலில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் செயல் வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளனர். ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
2022 இலிம் அனுரகுமாரவின் தலைமையில் அதை செய்ய முற்பட்டனர். அது நடக்கவில்லை. சஜித் பிரேமதாச இன்று சொன்னதை நாளை மறந்துவிடுவார். அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டுக்கு தேவையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்றார்.
