நுவரெலியா மாவட்டத்தில் – டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டப்பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நான்கு வயது மதிக்கத்தக்க சுமார் 3 அடி நீளமான இச்சிறுத்தையின் கழுத்துப்பகுதியில் காயம் இருந்துள்ளது. எனவே, சிறுத்தை எவ்வாறு உயிரிழந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. சடலம் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டத்தில் ஆக்ரோயா ஆற்றுக்கு அருகிலுள்ள புற்தரையில் இருந்தே சிறுத்தையின் சடலத்தை, நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










