எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாவார் எனக் கூறப்படுவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.
சஜித்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக்குவோம் என கபீர் ஹாசீம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூறிவருவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கே அக்கட்சியின் மற்றுமொரு எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜகத் விதான கூறியவை வருமாறு,
‘ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் நான் அங்கம் வகிக்கின்றேன். சஜித்தை டிசம்பரில் ஜனாதிபதியாக்கும் விடயம் பற்றி அங்கு எதுவும் பேசப்படவில்லை.
கபீர் ஹாசீம் தனது தனிப்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கலாம். அது உண்மையான கதை கிடையாது. கற்பனை அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும். அது தவறு என்றே நான் கூறுகின்றேன்.” – என்றார்.
