எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள சுற்றுலா பருவத்தை முன்னிட்டு நுவரெலியாவை சுத்தப்படுத்தி – அழகுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் டிசம்பர் சுற்றுலாப் பருவத்திற்காக நுவரெலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தூய்மையான அழகிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் வழிகாட்டலின் பேரில், நுவரெலியா மாநகர சபை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச நிறுவனங்கள், பாதுகாப்பு திணைக்களம், சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தக சங்கம் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இணைந்து இந்த நற்பணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த பணியில் பங்கேற்ற அமைப்புகள் மற்றும் குழுக்களால் நகரின் மிகவும் மாசுபட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
செ. திவாகரன்