‘டிசம்பர் ஜனாதிபதி’க்கு பிரதமர் நெத்தியடி!

எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் இன்று (1) காலி முகத்திடலில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

காலி முகத்திடல் இம்முறை மே தின கூட்டத்தால் பெருமையடைந்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துடன் மே தின கூட்டத்தை நடத்துவோம் என்று கடந்த முறை மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

ஏனைய அரசியல் கட்சிகளின் மே தின கூட்டத்துக்கும் எமது மே தின கூட்டத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றினோம். போராட்டத்தை கொண்டாடும் வகையில் இம்முறை மே தின கூட்டம் அமைந்துள்ளது. எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆகவே ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தினர் எமது வெற்றியின் பிரதான பங்காளர்கள் என்பதை ஒருபோதும் மறக்க போவதில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே செயற்படுவோம். எதிர்கால குறித்து அரசாங்கத்திடம் பாரிய திட்டங்கள் உள்ளன. சிறந்த நாட்டையே நாங்கள் எதிர்கால தலைமுறையினரிடம் ஒப்படைப்போம் என்றார்.

Related Articles

Latest Articles