அமெரிக்காவின் வரிப்போரில் இருந்து மீள்வதற்குரிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது என தெரியவருகின்றது.
இது தொடர்பில் அரசாங்க மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தொடர் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. ஜனாதிபதி தலைமையிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
அமெரிக்காவின் வரிக்கொள்கைக்கமைய இலங்கைமீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை முன்னெடுத்த இரு தரப்பு பேச்சுகளின் விளைவாக அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இது தொடர்பில் இலங்கைக்கு வெள்ளை மாளிகையால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் வரி அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே விரைவில் அமெரிக்காவுடன் இணக்கத்துக்கு வந்து வரி வீதத்தை மேலும் குறைத்தக்கொள்வதற்கு கொழும்பு முயற்சித்துவருகின்றது.
நாட்டின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இது விடயத்தில் நடவடிக்கை இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து உயர்மட்ட குழுவொன்று விரைவில் வாஷிங்டன் பறக்கவுள்ளது என தெரியவருகின்றது.