தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம்! இளைஞர், யுவதிகளுக்கான விசேட கோரிக்கை

” கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும், கருதரிக்க முடியாத நிலை உருவாகும் என்றெல்லாம் பரப்படும் வதந்திகளால் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம். கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சில பகுதிகளில் இளைஞர், யுவதிகள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் பாலியல் சக்தி குறைவடையும், கருதரிக்க முடியாத நிலை ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரமும் இந்த தயக்கத்துக்கு காரணம். இவ்வாறான தகவல்கள் போலியானவை. தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என உலகில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, உங்களுக்கு கிடைக்கும் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளுங்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles