ததல்ல பகுதியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, ததல்ல  பகுதியில் நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவில் டிஜே இசை நிகழ்ச்சியின் போது  இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles