தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்றுவரை அச்சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 9 ஆயிரத்து 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
