தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டிய’ 10 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டும்’ சடங்கை நடத்திய சாமியார் உடப்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – மாயாதுன்ன பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோதிலும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles