தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கூறப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடி-யில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.

ஏற்கனவே ஈஸ்வரன் படத்தை இந்தியாவில் தியேட்டரில் வெளியிடும் தினத்தன்று, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

அப்படி இருக்கையில், ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறி தான். விரைவில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles