இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 4 பேர் அகதிகளாகத் தமிழகம் சென்றுள்ளனர்.
மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையின் இராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை தரை இறக்கி விடப்பட்டனர்.
அவர்களை அவதானித்த தமிழகப் மீனவர்கள் மறாயன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற பொலிஸார், நால்வரையும் மீட்டு இராமேஸ்வரத்துக்குக் கொண்டு சென்றனர்.
அவர்கள் தற்போது பொலிஸாரின் விசாரணையில் உள்ளனர்.
நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், திருகோணமலை மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.










