தமிழர்களுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை – பொன்சேகா

“ தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.” -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சிவி விக்னேஸ்வரன் கூறியுள்ளாரே…என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“விக்னேஸ்வரன் என்பவர் அடிப்படைவாத நோக்கில் அரசியலை முன்னெடுப்பவர். அரசியலில் அவர் முதிர்ச்சியடைந்த நபரும் கிடையாது. வடக்கு, கிழக்கில் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்கள் இவ்வாறு முட்டாள்தனமாக கருத்துகளை முன்வைக்கமாட்டார்கள்.

2010 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கில் எனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அதுவும் போர் முடிவடைந்து குறுகிய காலப்பகுதிக்குள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே 85 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. வடக்கு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது. தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது.” – என்றார்.

Related Articles

Latest Articles