தமிழ் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை உயிர்போல் காப்போம்!

” வடக்கு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை மிகவும் பெறுமதியானது. அதனை உயிர்போல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு கிடைக்கப்பெற்ற   மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைவிட, வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கிய ஆணைதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகின்றது. வடக்கு மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயிர்போல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அம்மக்கள் வழங்கிய ஆணை மிக முக்கியமானது. அதனை சிதைக்கும் வகையில் செயற்படக்கூடாது.
மொழிப்பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படுவது அவசியம். வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. பெயர் பலகைகளில் தமிழ் மொழி பிழையாக உள்ளது. தெற்கிலும் முக்கியமான இடங்களில் தமிழ் மொழி பிரச்சினை உள்ளது. இவை தீர்க்கப்பட வேண்டும்.
காணி பிரச்சினை உள்ளது. அதுவும் நிவர்த்தி செய்யப்படும். பலாலி பகுதியில் ஒரு வீதி திறக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வீதிகள் உள்ளன. பாதுகாப்பு தரப்புகளுடன் பேச்சு நடத்தி அவற்றையும் திறப்பதற்கு முயற்சிப்போம்.
வடக்கில்தான் மீனவர் பிரச்சினை அதிகமாக உள்ளது. அவற்றை தீர்க்கும் வகையில் இராமாலிங்கம் தோழருக்கு மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு அரசியல் தீர்வுதான் மாகாணசபை. எனவே, நியாயமான தீர்வு முன்வைக்கப்படும்வரை மாகாணசபையில் கைவைக்கப்படமாட்டாது.”-என்றார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles