தனது தம்பியை அண்ணன் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவமொன்று பொரளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பௌரளை பகுதியைச் சேர்ந்த 55 வயது நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திக்கொண்டிருந்தவேளை குறித்த நபருக்கும், அண்ணனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போதே அவர் தம்பியை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










