லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி டஸ்கர்ஸ் , தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி, தம்புள்ள அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி களமிறங்கிய தம்புள்ளை அணி 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணி சார்பாக தலைவர் தசுன் சானக்க 37 பந்துகளில் 73 ஓட்டங்களையும், பட்டேல் 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் குவித்தனர். திக்வெல்ல 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
டக்வர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி கணிக்கப்பட்டது. இதன்படி தம்புள்ளை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கண்டி அணி சார்பாக மெண்டிஸ் 34 ஓட்டங்களைப் பெற்றார்.