ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நம்ப முடியாது. எந்த நேரத்தில் அவர் என்ன செய்வாரென்பது யாருக்கும் புரியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
” ஹொலிகொப்டர் கூட்டணியை ஆதரித்து பேசிய மைத்திரி, கூட்டணி உதயமாகி மறுநாளே தனித்து சென்றார்.
ஜனாதிபதி தேர்தலின்போதும் அவர் அவ்வாறுதான் செயற்பட்டார். மஹிந்த பக்கம் நின்று பொது வேட்பாளராக களமிறங்கினார்.
எனவே, மைத்திரியை நம்ப முடியாது. அவர் தயாசிறி ஜயசேகரவை சு.கவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கக்கூடும்.” – எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.