தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட 05 வயது சிறுவன் பலி

தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles