திங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார் தம்மிக்க பெரேரா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

அவருக்கு தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.

திங்கள் மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, மகளீர் விவகார அமைச்சு பதவி டயானா கமகேவுக்கு வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.

 

Related Articles

Latest Articles