ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து நெரிக்கப்பட்டமையே, அவரது மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது என பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரியினால் இந்த பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பிரபல தொழில் அதிபரான தினேஷ் ஷாப்டர், கொழும்பு, பொரளை பொது மயானத்தில் – வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டார்.
அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சைபலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










